கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்சீனிமுத்து. ராஜேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் அறிவரசன், பொதுக்குழு உறுப்பினர் திராவிடமணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் கிருஷ்ணன், சிவராஜ், ராஜேந்திரபாபு, மாரப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.
========