பழமையான புயல் காப்பக கட்டிடம் இடிப்பு

பழமையான புயல் காப்பக கட்டிடம் இடிக்கப்பட்டது.

Update: 2023-10-01 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் மிகவும் பழமையான புயல் காப்பகம் பழுதடைந்து பயனற்ற நிலையில் இருந்தது. இந்த காப்பகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பழுதடைந்த புயல் காப்பக கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் பழுதடைந்த பல்வேறு துறைகளில் உள்ள 103 கட்டிடங்கள் அப்புறப்படுத்தும் பணி மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்