ஜனநாயக மாதர் சங்க கருத்தரங்கம்
கடையத்தில் ஜனநாயக மாதர் சங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
கடையம்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் கடையம் சின்னத்தேர் திடலில் நடைபெற்றது. கடையம் ஒன்றிய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். விநாயகி வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வாசுகி முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா தொடக்க உரையாற்றினார்.
பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சுலோக்சனா, மாதர் சங்கம் மாநில குழு உறுப்பினர் கற்பகம், வட்டார காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, மாதர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, தர்மபுரம்மட பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம், மாவட்ட கவுன்சிலர்கள் சுதா, மைதீன் பாத்திமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாதர் சங்க மாநில இணைச்செயலாளர் ராணி நிறைவுறை ஆற்றினார். ஒன்றிய துணைச் செயலாளர் சின்னத்தாய் நன்றி கூறினார்.