டெம்ேபா கண்ணாடி உடைப்பு
குலசேகரம் அருகே ச.ம.க. நிர்வாகியின் டெம்ேபா கண்ணாடி உடைப்பு
குலசேகரம்,
குலசேகரம் அருகே உள்ள செறுதிக்கோணத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது42). இவர் சமத்துவ மக்கள் கட்சியின் குலசேகரம் பேரூர் செயலாளராக உள்ளார். மேலும் செறுதிக்கோணம் பகுதியில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். இவர் சம்வத்தன்று தனது மினிடெம்போவை வழக்கம் போல் கடையின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த போது மினிடெம்போவின் முன்பக்க கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மினி டெம்போவின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.