15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரிநீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்ஈரோட்டில் பரபரப்பு

15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்ட தால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-11 20:54 GMT

வருகிற 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் திறக்க...

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஆகஸ்டு 15-ந் தேதி தேதி தண்ணீர் திறப்பதை தமிழக அரசு ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் அரசாணையாக வெளியிட வேண்டும் எனவும், அரசாணை வெளியிடப்படவில்லை என்றால் ஆகஸ்டு 11-ந் தேதி ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க தலைவர் ரவி, கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு மற்றும் கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீர்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்.

விவசாயிகளின் முற்றுகை போராட்டம் காரணமாக ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்