ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி யினர் கையெழுத்து இயக்கம்

உடன்குடியில் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி யினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.;

Update: 2022-09-19 18:45 GMT

உடன்குடி:

உடன்குடியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்த தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சித்திரைபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுடலைமுத்து, நகர தலைவர் ஆத்திசெல்வம், ஒன்றிய தலைவர் செந்தில்செல்வம், சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். ஏராளமான பொதுமக்களிடம் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையெழுத்து வாங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்