புலியூர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
புலியூர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளத.
இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் கரூர் மாவட்ட மாநாடு புலியூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கலாராணி தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் லலிதா சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், கோவில்பாளையத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்க இடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும்,
ஓடமுடையார் பாளையம் பகுதியில் தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும், புலியூர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் நாட்ராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.