வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2023-07-14 18:45 GMT

தேவகோட்டை

ஆட்டூர் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நடராஜன் அஞ்சுக்கோட்டை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தேவகோட்டை உதவி செயற்பொறியாளருக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். அந்த புகார் மீது பரிசீலனை செய்த மணிமுத்தாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் விக்னேஸ்வரன் அனுப்பி உள்ள பதிலில் கூறியிருப்பதாவது:- திருவாடானை வட்டம், ஆட்டூர், கோவணி மற்றும் தேவகோட்டை வட்டம், மருதவயல் கண்மாய்களுக்கு செல்லும் வரத்துக்கால்வாய் பருத்தியூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் குறுக்கே கடந்து செல்லும் இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது என்றும், ஆக்கிரமிப்பால் தண்ணீர் கண்மாயை சென்றடைய இடையூராக உள்ளதாகவும், கூறப்பட்ட மனுவிற்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் நிலஅளவை செய்துதர கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறையினர் அளவீடு செய்து கொடுத்த பின்பு தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டும் வருவாய்த்துறை தாமதத்தால் பணிகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கண்மாய்களுக்கு வரும் தண்ணீர் வரத்து வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கோரிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்