முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க கோரிக்கை

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-22 13:26 GMT

திருச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாலக்கரையில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குலாம்தஸ்தகீர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சையது ஜாகிர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் சுலைமான், பொதுச் செயலாளர் அப்துல்கரீம், துணைத்தலைவர் பாரூக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் தமிழக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கவேண்டும், குடியுரிமை திருத்த சட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்