கரூர் தொகுதியை காங்கிரசுக்கு மீண்டும் வழங்கக்கூடாது என கோரிக்கை

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிரம் காட்டி வருகிறது.

Update: 2024-02-05 07:09 GMT

சென்னை,

ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது. இதில் கரூர் தொகுதியை காங்கிரசுக்கு மீண்டும் வழங்கக் கூடாது என ஒருசில நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் கரூரில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக தி.மு.க. நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

தி.மு.க.விற்கு கரூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவும் தி.மு.க. தலைமையின் உத்தரவை ஏற்று பணியாற்ற தயாராக இருக்கிறோம் எனவும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் உத்தரவாதம் அளித்தனர். இறுதியில், யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்தாலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்