வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-06-09 20:41 GMT

திசையன்விளை:

இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திசையன்விளை தாசில்தார் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

தாமிரபரணி ஆற்றில் இருந்து மழை காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதியான திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் 2002-ம் ஆண்டு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மழை சரியாக பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்