தூத்துக்குடி-மும்பை ரெயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை
தூத்துக்குடி-மும்பை ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் அப்பாத்துரை உள்ளிட்டோர் மத்திய ரெயில்வே பொது மேலாளர் நரேஷ் லால்வாணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் மராட்டிய மாநில எம்.பி. வினயக் ராவுத்தின் பரிந்துரை கடிதத்தையும் வழங்கினர்.
அதில், மும்பை-தூத்துக்குடி இடையே கோடைகால சிறப்பு ரெயில் (வண்டி எண் 01143/01144) இயக்கப்பட்டது. இந்த ரெயில் புனே, ரேனிகுண்டா, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை ஆகிய கோவில் நகரங்கள் வழியாக இயக்கப்பட்டது. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தூத்துக்குடி-மும்பை ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளனர்.