இலங்கை மக்களுக்கு 2-ம் கட்டமாக பொருட்கள் அனுப்பி வைப்பு: மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

இலங்கை மக்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.67.70 கோடி மதிப்பில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-06-22 19:27 GMT

சென்னை, 

இலங்கை மக்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.67.70 கோடி மதிப்பில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

'இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னலுறும் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக ரூ.67.70 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இன்று (நேற்று) 2-ம் கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டன. அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்.'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்