புல்லட்டுக்கு ஸ்டாண்ட் போட உதவியாளர் - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ருசிகர தகவல்

அ.தி.மு.க.வில் பதவிகள் கிடைக்கும். உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உழைப்பும் விசுவாசமும் இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம்.

Update: 2023-04-04 10:06 GMT

சென்னை

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் ஏற்பாடு செய்த டுவிட்டர் ஸ்பேசஸ் உரையாடலில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், பல்வேறு ருசிகர நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

"எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். நான் ஒரு விவசாயி. எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். அ.தி.மு.க. தொண்டனாக சிலுவம்பாளையம் கிளை கழக செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கினேன். பின்னர் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அளவில் பொறுப்பை வகித்தேன். அரசியல் ரீதியாக பல தடைகளை சந்தித்திருந்தாலும் படிப்படியாக உயர்ந்து இன்று தொண்டர்களால் பொதுச் செயலாளராக உயர்ந்திருக்கிறேன்.

உழைப்பும், விசுவாசமும் இருந்ததால் அ.தி.மு.க.வில் பதவிகள் கிடைக்கும். உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உழைப்பும் விசுவாசமும் இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம். இது இரண்டின் காரணமாகவும், இறைவன் அருளாலும் இன்று நான் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிருக்கிறேன்.

இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். அரசியல் வாழ்க்கையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவு, சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவங்கள் மறக்க முடியாது.

தனக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்த இருசக்கர வாகனம் ராயல் என்பீல்டு புல்லட் என்றும் கல்லூரி படித்த காலத்தில் தந்தையிடம் புல்லட் பைக் வாங்கித் தருமாறு கேட்டதாகவும், தன்னால் ஸ்டாண்ட் போட முடியாததால் கல்லூரிக்கு புல்லட் பைக்கில் செல்லும்போது ஸ்டாண்ட் போட உதவியாளர் வைத்துக்கொண்டதாகவும், எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் ஸ்பேஸில் பகிர்ந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்