1,593 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

1,593 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

Update: 2023-08-12 19:15 GMT

கோவை,

கோவை அரசு கலைக்கல்லூரியில் 31-வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் சிறப்பு மற்றும் சாதனைகள் குறித்து கல்லூரி முதல்வர் உலகி கூறினார். விழாவில் 1,205 இளங்கலை மாணவர்கள், 388 முதுகலை மாணவர்கள் என மொத்தம் 1,593 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளின் இயக்குனரக கல்வி இயக்குனர் கீதா பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும் போது, 170 ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவை அரசு கலைக் கல்லூரியில் படித்தவர்கள், அரசு பணியிலும், ஆட்சியாளர்க ளாகவும், டாக்டர்களாகவும், திரைத்துறை உள்பட பல்வேறு துறை களில் சிறந்து விளங்குகின்றனர். தன்னம்பிக்கை ஒன்றே மாணவ- மாணவிகளின் மிகச்சிறந்த ஆயுதம் என்றார்.

விழாவில் பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெய சந்திரன், புலியகுளம் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வீரமணி, பேராசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்