சாலை சீரமைப்பில் தொய்வு

சாலை சீரமைப்பில் தொய்வு

Update: 2023-05-02 10:51 GMT

திருப்பூர்

திருப்பூர் வலம் ரோட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய பணிகள் அதன்பின் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் வாலிபாளையம் செல்லும் பிரிவில் சாய்பாபா கோவில் அருகே நீண்ட நாட்களாக பணி முடியாமல் இருப்பதால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சாலை மண்மேடு போல் காட்சியளிப்பதால் மண்புழுதி காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு எஞ்சிய பணிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்