மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடக்க தினம்

மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடக்க தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT

மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் 54-வது தொடக்க தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோல், கமாண்டோ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், மோப்ப நாய்கள் அணிவகுப்பு நடந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் செயல்பாடுகள் குறித்த விளக்கமும் நடந்தது.

நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குனர் கணேசன், மத்திய விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு உதவி இயக்குனர் கே.கே.ஷா, விமான நிலைய துணை பொதுமேலாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடக்க தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதிபோட்டியில் விமான நிலைய ஊழியர்கள் அணியும், மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர்கள் அணியும் மோதின.

இதில், விமான நிலைய ஊழியர்கள் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மதுரை மாநகர துணை கமிஷனர் சாய்பிரனீத் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்