முகநூலில் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு; வாலிபர் கைது
முகநூலில் முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள வெண்மனச்சேரி வடபாதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் பரமானந்தம் (வயது28). இவர் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்தும், தி.மு.க. குறித்தும் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வெண்மனச்சேரி தென்பாதியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட ஆதி திராவிட நலக்குழு துணை அமைப்பாளர் ஜோதிபாசு கீழையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமானந்தத்தை கைது செய்தனர்.