வாகனம் மோதி மான் செத்தது

Update: 2023-06-04 16:43 GMT


காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் மலையில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மலையிலிருந்து கீழிறங்கி, அடிவாரப் பகுதியில் குண்டடம் சாலையை கடக்க முயன்ற மான் ஒன்று ஒரம்பபுதூர் பிரிவு அருகே வாகனம் மோதி செத்தது. இது பற்றி தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் உடலை மீட்டனர். கோடை காலங்களில் வனப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் நிரப்பினால் மான்கள் கீழிறங்கி வருவது தடுக்கப்படும். அதனால் மான்களின் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்