தொண்டி,
திருவாடானை தாலுகா மங்களக்குடி வயல்காட்டு பகுதியில் மான் ஒன்று சுற்றி திரிந்தது. இதைபார்த்த நாய்கள் துரத்தி சென்று அந்த புள்ளிமானை கடித்து குதறியது. இதில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த மங்களக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இப்பகுதியில் அடர்ந்த காடுகள், கண்மாய்கள் இருப்பதால் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் மான்களை நாய்கள் விரட்டி கடிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏராளமான மான்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.