தேன்கனிக்கோட்டை அருகே சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மான் மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மான் மீட்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே நெல்லுகுந்தி கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் புள்ளி மான்கள் அதிக அளவு வாழ்கின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியேறிய புள்ளிமான் ஒன்று நெல்லுகுந்தி கிராமத்தின் அருகே சுருக்கு கம்பி வேலியில் சிக்கி உள்ளது.
சுருக்கு கம்பி வேலியில் சிக்கி படுகாயத்துடன் தவித்த புள்ளிமானை தெருநாய்கள் கூட்டம் கடித்து குதறி உள்ளது. இதனை பார்த்த கிராமமக்கள் கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் இது குறித்து கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனக்காவலர் ராம்குமாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அவரது தலைமையில் வனத்துறையினர் நெல்லுகுந்தி கிராமத்திற்கு சென்று புள்ளி மானை மீட்டனர்.பின்னர் காயமடைந்த அந்த புள்ளி மானை வனத்துறையினர் சிகிச்சைக்காக அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். புள்ளி மான் குணமான பின்பு அதை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.