வாகனம் மோதி மான் சாவு
கொடைரோடு அருகே வாகனம் மோதியதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே பொட்டி செட்டிபட்டி பகுதியில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றி வனக்காப்பாளர்கள் சங்கர், புகழ் கண்ணன் ஆகியோரிடம் கொடுத்தனர். பின்னர் மானின் உடல் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. சாலையில் கடக்க முயன்றபோது வாகனம் மோதி மான் இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர்.