நாய்கள் கடித்து மான் சாவு
வெம்பக்கோட்டை அருகே நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக இறந்தது.;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் காட்டு பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. உணவுக்காக மான் ஒன்று கிராமத்தில் நுழைய முயன்றது. அப்போது நாய்கள் துரத்தி கடித்ததில் காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாய்க்கரையில் பிரதே பரிசோதனை செய்து மானை புதைத்தனர்.