தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா
சிவகிரியில் நகர பா.ஜ.க. சார்பில் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா நடந்தது
சிவகிரி:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் வழிகாட்டுதலின்படி, பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடியான பண்டித் தீனதயாள் உபாத்தியாயாவின் 105-வது பிறந்தநாள் நாள் விழா நடந்தது. இதையொட்டி சிவகிரி நகர தலைவர் ஒருசொல்வாசகன் தலைமையில் பா.ஜ.க.வினர் பஸ் நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய துணைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கருப்பையா தேவர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சேட்குமார் புலியூரான், ராமராஜ், முத்துச்சாமி, ராஜேந்திரன், ஊரக மற்றும் மேம்பாட்டு துறை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.