பத்திரப்பதிவு அலுவலகங்களை மாற்ற வேண்டும்
வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரில் பழைய தாலுகா அலுவலகம் இருந்தது. அங்கு பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகம் அம்மூர் செல்லும் சாலையில் மாற்றப்பட்டது. அதேபோல், ராணிப்பேட்டை சங்கர் நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரு இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களை வாலாஜாவில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.