பத்திரம், நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

பத்திரம், நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-24 19:32 GMT

தமிழ்நாடு பத்திரம்-நகல் எழுதுவோர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் தமிழக அரசு ஆவண எழுத்தர் நல நிதியக்குழுவிற்கு சங்கத்தினை அங்கீகாரம் செய்தமைக்கும், அரசாணைப்படி 4 நபர்களை நல நிதிய இயக்குனர்களாக தேர்வு செய்தமைக்கும், நலநிதிய பயனாளிகளுக்கு பலனளித்தலையும் சேர்த்து முதல்-அமைச்சருக்கும், பதிவுத்துறை அமைச்சருக்கும், பதிவுத்துறை செயலாளருக்கும், பதிவுத்துறை தலைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, பாராட்டு விழாவையும் முப்பெரும் விழாவாக சென்னையில் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும். நலநிதியத்தின் செயலாளர் பொறுப்பு மற்றும் இயக்குனர்கள் கூடுதலாக 5 நபர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட சங்கங்களை சேர்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக கமலக்கண்ணன் வரவேற்றார். முடிவில் அப்துல் அலீம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்