மழையின்றி நெற்பயிர்கள் கருகி விட்டதால் வறட்சி கிராமமாக அறிவித்து நிவாரணம் -விவசாயிகள் கலெக்டரிடம் மனு

மழையின்றி நெற்பயிர்கள் கருகி விட்டதால் வறட்சி கிராமமாக அறிவித்து நிவாரணம் -விவசாயிகள் கலெக்டரிடம் மனு

Update: 2022-12-29 18:45 GMT


திருவாடானை தாலுகா கட்டவிளாகம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் தலையில் முக்காடு போட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை பகுதியில் இந்த ஆண்டு போதிய மழையில்லாமல் போனதால் நெல் விவசாயம் கருகி விட்டது. இதனால் வேதனை அடைந்து வருகிறோம். இந்த ஆண்டு நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டோம். தற்போது அனைத்து பயிர்களும் தண்ணீரின்றி கருகி விட்டன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு தவித்து வருகிறோம். எனவே, பயிர் பாதிப்பை முறையாக கணக்கிட்டு வறட்சி கிராமமாக அறிவித்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பயிர்காப்பீடு செய்துள்ள எங்களுக்கு அரசின் இழப்பீடு நிவாரணம் முழுமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்