போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்த முடிவு
போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமை தாங்கினார். சமூக நீதி மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் நூர்தீன் முன்னிலை வகித்தார். த.மு.மு.க. மாநில பொருளாளர் ஷபியுல்லாகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதுபோல் போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர் பிரசாரங்களில் ஈடுபடுவது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது. த.மு.மு.க.வின் 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி அன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.