25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க முடிவு

25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க முடிவு செய்தனர்.

Update: 2023-04-04 19:41 GMT

சிவகாசி, 

தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் கூறியதாவது-

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் மாதம் 3-ந்தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு உத்தவிட்டுள்ளார். இதில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 25 ஆயிரம் உறுப்பினர்களும், சிவகாசி ஒன்றிய பகுதியில் 25 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டு பொறுப்பாளர்களிடமும் புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதே போல் சிவகாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் 24 வார்டுக்கு உட்பட்ட நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை கழக மேலிட பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட பாலா கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருத்தங்கல் 7-வது வார்டு பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர செயலாளர் உதயசூரியன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை தொய்வு இல்லாமல் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 7-வது வார்டு செயலாளர் ராஜேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்