விரகாலூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
விரகாலூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த 7 பேர் தஞ்சை அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையிலும், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை மாவட்டம் கண்டியூரை சேர்ந்த சுந்தர்(வயது 21) என்பவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.