தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-26 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தணிகைமலை (வயது 47). தொழிலாளியான இவர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். தணிகைமலை சம்பவத்தன்று சு.கள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள தனது மைத்துனர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பின்னர் அவர் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அதே ஊரை சேர்ந்த ராமர் மகன் சுரேந்தர் (33) என்பவர் தணிகைமலையிடம் வீண் தகராறு செய்ததுடன், அவரை சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தணிகைமலை கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுரேந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்