விவசாயிக்கு கொலை மிரட்டல்

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-03 18:45 GMT

போடி,

போடி அருகே உள்ள சின்னமுடக்கு புலம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுகைல் (வயது 34). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரமேஷ், முகமது சுகைல் மீது மோட்டார்சைக்கிளால் மோதி கீழே தள்ளி தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது சுகைல் குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்