விவசாயிக்கு கொலை மிரட்டல்
மானூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
மானூர்:
மானூர் அருகே தெற்குப்பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் வரவு செலவு கணக்கு சம்பந்தமாக கிறிஸ்தவ மக்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி அந்தோணி (வயது 62) என்பவர் தேவாலயத்திற்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் (45) என்பவர் அந்தோணியை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளார். மேலும் தேவாலய வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்காமல் யாரும் ஆலயத்திற்கு செல்லக்கூடாது எனக்கூறி கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தார்.