விவசாயிக்கு கொலை மிரட்டல்
தேனியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
தேனி பெரியகுளம் சாலையை சேர்ந்தவர் பிரசன்னா. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் முத்துத்தேவன்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நிலப்பிரச்சினை தொடர்பாக அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பிரசன்னா புகார் செய்தார். அதன்பேரில் கொடுவிலார்பட்டியை சேர்ந்த விஜயராஜன், ராமர், கதிர்வேல்பாண்டியன், பாலகுருசாமி, ஆதிபட்டியை சேர்ந்த கனகராஜ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.