சின்னசேலம் அருகே மினிலாரி கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் 2 பேர் கைது

சின்னசேலம் அருகே மினிலாரி கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-15 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் மகேந்திரன் (வயது 30) டிரைவரான இவர் சம்பவத்தன்று மினிலாரியில் சின்னசேலத்தில் இருந்து பெத்தானூர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிறுவத்தூர் கழுகு என்ற இடத்தில் சென்றபோது 5 பேர் சாலையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த மகேந்திரன் அவர்களை ஓரமாக நடனமாடுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் மினிலாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரியசிறுவத்தூரை சேர்ந்த செல்வம் மகன் அஜித் (23), சேட்டு மகன் குட்டி (21), முருகேசன் மகன் ரவிக்குமார் (22), ராம்குமார், கோவிந்தன் மகன் ராஜதுரை (22) ஆகிய 5 பேர் மினிலாரி கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித், ராம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை வலை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்