வியாபாரிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-05-09 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 53). வியாபாரியான இவருக்கு சொந்தமான இடம் சுப்பராயபுரத்தில் உள்ளது. அதில் அறை கட்டி கதவு அமைத்துள்ளார். இந்த இடம் தொடர்பாக முதலூரைச் சேர்ந்த அவரது உறவினர் ஜான் வசீகரன் மகன் ஆனந்தயூஜீன், தினகர் மகன் அசோக் வெஸ்லீ ஆகியோருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இந்நிலையில் கடந்த 2-ந்தேதி ஆனந்த யூஜின், அசோக் வெஸ்லி ஆகியோர் சுப்பராயபுரம் இடத்தில் உள்ள கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த சுதாகர், இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுதாகர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்