டீ மாஸ்டருக்கு கொலை மிரட்டல்; பல் டாக்டர் மீது வழக்கு
கம்மாபுரத்தில் டீ மாஸ்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பல் டாக்டர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
விருத்தாசலம்,
புவனகிரி அடுத்த மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபு மகன் பாண்டியராஜன்(வயது 36). இவர் கம்மாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஓட்டலுக்கு வந்த கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகனும் பல் டாக்டருமான பாண்டியராஜன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பல் டாக்டர் பாண்டியராஜன், டீ மாஸ்டர் பாண்டியராஜனை அசிங்கமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்ததோடு, ஓட்டலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பல் டாக்டர் பாண்டியராஜன் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.