இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது
நெல்லை அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தருவை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்தார். இதனால் அந்த பெண் அய்யப்பனை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அய்யப்பன், அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். தலைமறைவான சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.