தொழிலாளிக்கு கொலைமிரட்டல் ;வாலபர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வாலபர் கைது செய்யபட்டார்.
தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்தவர் கிங்ஸ்லின். இவருடைய மகன் கின்னர் ஜோன்ஸ் ராஜ் (வயது 37). தொழிலாளி. இவருக்கும், தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி செல்டன் மகன் ஷாருக்கான் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் கின்னர் ஜோன்ஸ் ராஜ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஷாருக்கான், கின்னர் ஜோன்ஸ் ராஜிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் வழக்குபதிவு செய்து ஷாருக்கானை கைது செய்தார்.