பெண்ணுக்கு கொலை மிரட்டல்:3 பேர் கைது

தலையால்நடந்தான்குளத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-17 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான் குளம் கிராமத்தில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அல்பர்ட் மனைவி கஸ்தூரி. கணவர் இறந்து விட்டார். சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன்கள் முருகன், காளிராஜ், முத்துசாமி மகன் முத்துக்குமார் ஆகிய 3 பேரும் கஸ்தூரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்