பெண்ணுக்கு கொலை மிரட்டல்

கூத்தாநல்லூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-03 14:18 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி வெண்ணிலா (வயது40). இவர் தனது உறவினர் மகன் பாரதிராஜாவை அந்த பகுதியில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் பாரதிராஜாவின் நண்பரும், விநாயகர் ஊர்வலத்தை நடத்தியவர்களில் ஒருவருமான அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்பிரபு (24) என்பவர், சம்பவத்தன்று இரவு வெண்ணிலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரது கணவர் தியாகராஜனை கீழே தள்ளிவிட்டு, வெண்ணிலாவை கையால் அடித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்பிரபுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்