ராஜபாளையம் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்
ராஜபாளையம் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன். இவர் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவதானத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜபாளையம் நகர செயலாளர் முருகேசன் தன் மீது அவதூறு கருத்துக்களை கூறியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்" என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.