போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; பெண் கைது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-08 18:05 GMT

அறந்தாங்கி:

அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பாலமுருகன் (வயது 33) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று பாலமுருகன் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் இருந்த போது டேவிதர்சாலையை சேர்ந்த ராதிகா (42) என்பவர் பாலமுருகனை தகாத வார்த்தைகளால் பேசி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்