பஞ்சாயத்து துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல்; விவசாயி கைது
கயத்தாறு அருகே பஞ்சாயத்து துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 49). விவசாயி. இவர் வில்லிசேரி பஞ்சாயத்து துணைத்தலைவராக இருக்கும் காசிராஜனை அவதூறாக பேசியதாகவும், அவரது வீட்டுக்கு சென்று அரிவாள்மனையால் தாக்க முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காசிராஜன் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தி, வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.