உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு கொலை மிரட்டல்

செங்கோட்டை அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-11-01 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே பிரானூர் பார்டர் பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் சார்பில் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் தரம் குறைந்து இருப்பதாக குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஏராளமானோர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு ஆன் லைன் வழியாக புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான நாகசுப்பிரமணியன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து அழித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மதுபான விடுதி ஊழியர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்