மீன்வளத்துறை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

பெரியகுளத்தில் மீன்வளத்துறை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-02-09 19:00 GMT

பெரியகுளத்தில் உள்ள தாமரைக்குளம் கண்மாயை முத்துப்பாண்டி என்பவர் மீன் பாசி குத்தகைக்கு எடுத்திருந்ததாகவும், குத்தகை காலம் முடிந்தும் பணம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துப்பாண்டியின் குத்தகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கண்மாயில் மீன்பிடி உபகரணங்களை அப்புறப்படுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. கண்மாயில் இருந்த உபகரணங்களை அப்புறப்படுத்த மீன்வளத்துறை ஆய்வாளர் கவுதமன் மற்றும் அலுவலக ஊழியர்கள் நேற்று சென்றனர். அப்போது அங்கிருந்த முத்துப்பாண்டி, முத்தையா, சின்னசாமி உள்பட 7 பேர் சேர்ந்து அவர்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கவுதமன் கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்