ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.;

Update: 2022-06-19 14:37 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன், ஏட்டு அருண் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த வாலிபர் கோவில்பட்டி புதுக் கிராமம் சிந்தாமணி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் தங்கராஜ் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவர் சிவகிரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று கோவில்பட்டி வந்தவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்