டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கரும்பு தொழிற்சாலை ஊழியர் சாவு

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கரும்பு தொழிற்சாலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-17 18:15 GMT

கிருஷ்ணராயபுரம்,

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் அருகே உள்ள திருக்கோவில் காவல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 41). இவர் கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள கரும்பு தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தொழிற்சாலை வேலை நிமித்தமாக கடவூர் தாலுகா சங்கி பூசாரி கிராமத்தை சேர்ந்த வடிவேல் (33) என்பவருடன் டிராக்டரில் லாலாபேட்டை பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மகிளிப்பட்டி பகுதியில் வந்தபோது, 2 பேரும் டிராக்டரை நிறுத்தி ஓய்வு எடுத்ததாக தெரிகிறது.

பின்னர் டிராக்டரை வடிவேல் எடுத்தபோது, ஜெயபிரகாஷ் நிலைதடுமாறி கீழே விழுந்து டிராக்டரின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த ஜெயபிரகாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜெயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்