மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.;

Update:2023-04-21 00:15 IST

ஆர்.எஸ்.மங்கலம், 

திருப்பாலைக்குடி அருகே உள்ள ஒரு இறால் பண்ணையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெய நம்பி(வயது30) என்பவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று மின் மோட்டார் வேலை செய்யாததால் ஜெயநம்பி அதனை கழட்டி வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பாலைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஜெயநம்பி இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்