குளியல் அறையில் தவறி விழுந்தவர் சாவு

குளியல் அறையில் தவறி விழுந்தவர் சாவு

Update: 2022-06-22 15:29 GMT

 திங்கள்சந்தை:

திருவனந்தபுரம் அருகே உள்ள கரக்குளம் கச்சாளி களத்துக்கால் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் நாயர் (வயது 46). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பெறுவதற்காக வில்லுக்குறி அருகே உள்ள திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்த நண்பர் தவசிமுத்து வீட்டுக்கு வந்தார்.

ஸ்ரீகண்டன் நாயர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குளியல் அறைக்கு சென்றவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த தவசிமுத்து உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரீகண்டன் நாயர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்